தெற்கில் பாதாள உலக குழுவினர் பயன்படுத்திய துப்பாக்கிகள் இராணுவ முகாமில் இருந்து எடுக்கப்பட்டதா?
கரந்தெனிய இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்ட T-56 துப்பாக்கியைக் கொண்டு இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக்கவின் மாமனார் உட்பட தென் மாகாணத்தில் பல கொலைகள் பாதாள உலகக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கரந்தெனிய இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த T-56 துப்பாக்கி உட்பட பல மகசீன்கள் காணாமல் போயுள்ளதுடன், இது தொடர்பில் கரந்தெனிய பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த ஆயுதக் களஞ்சியத்தின் பாதுகாவலரை இராணுவ பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சந்தேக நபர் எதிர்வரும் நாட்களில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.
கரந்தெனிய ஆயுதக் களஞ்சியசாலைக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சில T-56 மகசீன்கள் இராணுவப் பொலிஸாரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து காணாமல் போன T-56 துப்பாக்கி, மக்களைக் கொல்வதற்காக பாதாள உலகக் குழுவினருக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இராஜாங்க அமைச்சர் சானக்கவின் மாமனாரின் பல கொலைகளுக்கு பாதாள உலகக் கும்பல்களால் T-56 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதுடன், காணாமல் போன ஆயுதத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.