நாகபட்டினம் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பிப்பதில் தாமதம்!
#India
#SriLanka
#Kangesanthurai
#Tamilnews
#Ship
Mayoorikka
2 years ago
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பமாகவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் பிற்போடப்பட்டுள்ளது.
தொழிநுட்ப தடங்கள் காரணமாக, எதிர்வரும் 12ஆம் திகதி வரையில், இந்த சேவை பிற்போடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும், இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. செரியாபாணி கப்பலின் பரீட்சார்த்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
எனினும், தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக சேவைகள் நிறுத்தப்படுவதாக இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.