பெரும் திண்டாட்டத்தில் கட்சி மாறிய உறுப்பினர்கள்! உறுப்புரிமைகளை இழக்க நேரிடும்
கட்சி மாறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சர் நசீர் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் எம்.பிக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கட்சி மாறாததால் தான் அஞ்சவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
விவசாய அமைச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர், நசீர் அஹமட்டுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சி மாறிய சிலர் அமைச்சுப் பதவிகளை வகித்து வருவதாகவும் அமைச்சுப் பதவிகள் மற்றும் உறுப்புரிமைகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதே பயம் உங்களுக்கு இல்லையா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, கட்சி மாறாததால், அவ்வாறான அச்சம் தமக்கு ஏற்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.