2023ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2023ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த Claudia Goldin என்ற ஆய்வாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பு குறித்து மேற்கொண்ட ஆய்வு க்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீனமாயமாக்கல் போது விவசாய சமூகத்திலிருந்து ஒரு தொழில்துறை சமூக மாற்றத்திற்கு உட்பட்ட போது, வேலைக்கு செல்லும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக குறையத் தொடங்கியது. தொழில்துறை கால கட்டடதில் பெண்களுக்கான கல்வி அணுகல் விரிவாக்கப்பட்ட போதிலும், வீட்டுக்கு வெளியில் சென்று வேலை செய்யும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
இருப்பினும்,தொழில்துறையில் இருந்து சேவைத் துறையின் வளர்ச்சிஏற்பட்ட போது தான், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதவாது, சந்தையில் பெண்களிப்பு தொடர்ச்சியாக வளர்ச்சியை நோக்கி செல்வதற்கு பதிலாக, U-shaped curve வடிவத்தில் செல்வதாக Claudia Goldin கண்டறிந்து விளக்கினார்.
மாற்றம் அடைந்து வரும் பொருளாதாரங்கள், உழைப்புச் சந்தையில் பெண்களின் குறைவான அந்தஸ்து, ஆண்- மைய உணர்வு சிந்தனை, குடும்பம் என்ற மைய அலகு பெண்ணில் செலுத்தும் ஆதிக்கம் ஆகியவைகள் இதற்கு முக்கிய காரணமும் என்று எடுத்துரைத்தார்.



