லண்டன் செல்ல முயன்று உயிரிழந்த சண்முகராசா டினேஸின் குடும்பத்தினருக்கு தியாகி தியாகேந்திரன் வாமதேவா உதவி!
அண்மையில் France இல் இருந்து காட்டுவழியாக London செல்ல முயன்று உயிரிழந்த இலங்கையின் வடமாகாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த சண்முகராசா டினேஸின் இல்லத்திற்கு இன்றைய (09.10) தினம் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா விஜயம் செய்திருந்தார்.
இதன்போது அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் தற்போதைய செலவுகளைச் சமாளிக்க ஒருலட்சம் ரூபாவை உடனடியாக வழங்கியதோடு, பிள்ளைகளின் எதிர்கால கல்விச் செயற்பாடுகளைப் பொறுப்பேற்பதாகக் கூறியதுடன் பின்னர் அவசியம் ஏற்பட்டால் இதர உதவிகள் தொடர்பில் தன்னைத் தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பெருந்தொகையில் கடன்பட்டு முறையற்ற விதத்தில் இவ்வாறான ஆபத்தான வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் எமது இளைய தலைமுறை ஒருபக்கத்தில் முகவர்களால் ஏமாற்றப்படுவதையும், மறுபுறத்தில் இவ்வாறான உயிரிழப்புகள் மற்றும் இழப்புக்களை சந்திக்கவேண்டிவருவதையும் கவலையோடு நினைவுகூர்ந்தார்.
கடந்தகாலங்களில் அவ்வாறான பலருடைய குடும்பங்களுக்கு பல்வேறு வழிகளில் தியாகி தியாகேந்திரன் வாமதேவா உதிவிவருவதும் பலர் அறிந்ததே.