ரணில் விக்ரமசிங்க முதுகெலும்பு உள்ள சிறந்த தலைவர் - கோட்டாபய புகழாரம்!

#SriLanka #Ranil wickremesinghe #srilankan politics
PriyaRam
2 years ago
ரணில் விக்ரமசிங்க முதுகெலும்பு உள்ள சிறந்த தலைவர் - கோட்டாபய புகழாரம்!

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை அடியோடு நிராகரித்து சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி இல்லை என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பாராட்டுகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவியிலிருந்து நான் விலகியபோது புதிய ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவைப் பரிந்துரைத்திருந்தேன். 

அதற்கமைய நாடாளுமன்றம் அவரை புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்தது. ரணில் விக்ரமசிங்க முதுகெலும்பு உள்ள சிறந்த தலைவர் என்பதை அவர் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நிரூபித்துக் காட்டி வருகின்றார். 

இலங்கை இறைமையுள்ள நாடு. இங்கு வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு இடமில்லை. நாடாளுமன்றத்தை மீறி எவரும் முடிவுகளை எடுக்க முடியாது. 

நாடாளுமன்றத் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார். உண்மையில் அவர் சிறந்த தலைவர் எனவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!