தன்னால் தொடர்ந்தும் பதவியில் இருக்க முடியாது! மாற்றப்படும் பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம்?
#SriLanka
#Mahinda Rajapaksa
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago
தன்னால் என்றென்றும் பதவியில் இருக்க முடியாது என்றும் புதியவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் எதிர்காலத்தில் மாற்றத்திற்கு உள்ளாகும் எனவும் அவர் வலியுறுத்தியள்ளார்.
அளுத்கம விகாரையில் வழிபாடு செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தன்னால் என்றென்றும் பதவியில் இருக்க முடியாது என்றும் புதியவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் கூறும் அனைத்து விடயங்களையும் செய்வதற்கு இலங்கை கட்டுப்படாது எனவும் எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.