கொழும்பில் உடனடியாக அகற்றப்பட்ட பாரிய மரங்கள்!

#SriLanka #Colombo #Tree #Tamilnews #municipal council
Mayoorikka
2 years ago
கொழும்பில் உடனடியாக அகற்றப்பட்ட பாரிய மரங்கள்!

கொழும்பு மாநகர சபை கடந்த 8 நாட்களில் சுமார் 20 பெரிய வீதியோர மரங்கள், விழும் அபாயத்தில் உள்ள நிலையில் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த வாரம் கொள்ளுப்பிட்டியில் மரமொன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கொழும்பு மாநகரசபை இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

 ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 08) கொழும்பு புறநகர்ப் பகுதியில் உள்ள மூன்று பெரிய மரங்களை CMC அகற்றியதாக மாநகரசபையின் கைத்தொழில் நிர்வாகி சுஜீவ பரகஸ்தன்ன தெரிவித்துள்ளார். 

 கொழும்பு பல்கலைக்கழகத்தை அண்மித்த தர்ஸ்டன் வீதியில் மக்கள் வங்கியை நோக்கி சாய்ந்த பாரிய மரமும், ஹார்டன் பிளேஸ் மற்றும் கன்னங்கர மாவத்தையில் விழும் அபாயத்தில் இருந்த இரண்டு பெரிய வீதியோர மரங்களும் அகற்றப்பட்டதாக அவர் கூறினார். 

 சில மரங்களின் கிளைகள் வெட்டப்பட வேண்டும் என்றும் தெரு விளக்குகள் மற்றும் போக்குவரத்து விளக்குகளை தடுக்கும் மரங்கள் அகற்றப்படும் என்றும் பரகஸ்தன்ன மேலும் தெரிவித்தார்.

 சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வாரம் கொள்ளுப்பட்டியில் பேருந்து மீது சாலையோர மரம் விழுந்ததில் ஐந்து பயணிகள் உயிரிழந்ததை அடுத்து மாநகரசபை இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

 இந்த விபத்தைத் தொடர்ந்து, தற்போது நிலவும் ஈரமான சூழ்நிலையினால் விழும் அபாயத்தில் உள்ள பெரிய வீதியோர மரங்களை உடனடியாக ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளவற்றை அகற்றுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!