மிளகாய்ப் பொடியால் தாக்கி விட்டு தொழிலதிபரிடம் 45 லட்சம் கொள்ளை!
#SriLanka
#Police
#Investigation
#Crime
Mayoorikka
2 years ago
இன்று (09) அதிகாலையில் மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு வீடு நோக்கிச் சென்ற வர்த்தகர் ஒருவரை மிளகாய்ப் பொடியால் தாக்கி சுமார் 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
வர்த்தகர் காலை வியாபார இடத்தை மூடிவிட்டு தனது முச்சக்கர வண்டியுடன் மற்றுமொரு தொழிலாளியை ஏற்றிக்கொண்டு தொழிலாளியை மீகொட தம்ம மாவத்தை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், அவர் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, மீகொட சிறிரத்தன மாவத்தையில், முச்சக்கரவண்டியில் வந்த ஒருவர் மிளகாய்ப் பொடியைத் தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த பணப் பொதியுடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வர்த்தகர் செய்த முறைப்பாட்டையடுத்து மீகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.