முடிவுக்கு வரும் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம்
#SriLanka
#Police
PriyaRam
2 years ago
பொலிஸ்மா அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு சி.டி.விக்ரமரத்னவிற்கு இரண்டாவது முறையாகவும் வழங்கப்பட்ட 3 மாத கால சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சி.டி.விக்ரமரதன கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி தமது பதவியிலிருந்து ஓய்வுபெறவிருந்தார்.
எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவருக்கு 3 மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.