தந்தை செல்வா அரங்கில் எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு!
#SriLanka
#Mullaitivu
#srilankan politics
#Politician
PriyaRam
2 years ago
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன.
எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கதவடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கான முன்னாயத்தங்கள் நடந்து வந்த நிலையில் குறித்த திகதியில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் யாழ். தந்தை செல்வா அரங்கில் இன்று தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலில் பெரும்பாலும் இறுதி முடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது.