கவனமாக செயற்படாத பதிவாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை எழுதுவதில் கவனமாக செயற்படாத பதிவாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த பதிவாளர் நாயகம் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ்கள் எழுதும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சில சமயங்களில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பிழைகள் ஏற்படுவதாகவும் பதிவாளர் நாயகம் திணைக்கள அதிகாரிகளுடன் கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் தெரிவித்தார்.
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் அசல் நகல்களில் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் பதிவாளர் நாயகம் சமந்த விஜயசிங்க, சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஏ. டி. டபிள்யூ. குமாரசிங்கவுடன் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.