IMF இன் சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம்!

#SriLanka #Lanka4 #IMF #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
IMF இன் சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு மொரோக்கோவில் இன்று (09.10) ஆரம்பமாகவுள்ளது. 

பல நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் உட்பட பல அதிகாரிகள் இதில் இணைந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.  

இதன்படி, இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.  

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கை பெற்றுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பாக இந்த மாநாடு பயன்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். 

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையானது 2024 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு தேவையான பின்னணியை தயார் செய்யும் என தான் நம்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4