இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 30 மார்பக சிகிச்சை நிலையங்கள்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 30 மார்பக சிகிச்சை நிலையங்கள்!

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் புதிதாக 30 மார்பக சிகிச்சை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் ஹசரேலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மார்பக புற்றுநோயை தடுக்க முடியாவிட்டாலும், மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும், எனவே மார்பக புற்றுநோயை கண்டறியும் வாய்ப்பை விரிவுபடுத்தி இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் சிறப்பு என்னவெனில், புற்று நோய் நிபுணத்துவ சத்திரசிகிச்சை நிபுணர்களின் கீழ் உரிய கிளினிக்குகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

மேலும், இந்த கிளினிக்குகள் சுகாதார கிளினிக்குகள் மற்றும் புற்றுநோய் பரிசோதனை மையங்களுடன் கூடுதலாக நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!