மன்னார் மீனவனின் வலையில் சிக்கிய 10 அடி நீளமான விலாங்கு மீன்

#SriLanka #Mannar #Fish
Prathees
2 years ago
மன்னார் மீனவனின் வலையில் சிக்கிய 10 அடி நீளமான விலாங்கு மீன்

மன்னார் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் குழுவொன்று அரிய வகை இனத்தைச் சேர்ந்த விலாங்கு மீனைப் பிடித்ததாகவும் 10 அடிக்கு மேல் நீளமாக இருக்க வேண்டும் எனவும் மன்னார் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

 மன்னார் கடற்பரப்பில் நேற்று இரவு மன்னார் மீனவர்கள் குழுவொன்று மீன்பிடி வலைகளை சோதனையிடச் சென்ற போது விலாங்கு மீன் வலையில் சிக்கி இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

 வலையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த மீன் 10 அடிக்கு மேல் நீளமும் 8 கிலோ 400 கிராம் எடையும் கொண்டது என மீனவர்கள் தெரிவித்தனர்.

 ஆனால், இந்த வகை மீன்களை கடலில் காண முடியாது என்றும், மிகவும் அரிதான இந்த வகை மீன்களை உண்பதால் மனித உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் மன்னார் மீனவர்களின் நம்பிக்கை உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!