மாத்தறை மாவட்டத்தின் பாடசாலைகளை 02 நாட்களுக்கு மூட தீர்மானம்!
#SriLanka
#School
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இரண்டு நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண கல்வி, காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் வெளியிட்ட விசேட அறிவிப்பொன்றில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 10 ஆம் திகதி செவ்வாய்க் கிழமைகளில் மூடப்படும்.
தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.