ஹமாஸ் நரகத்தின் வாசலைத் திறந்ததாக கூறும் இஸ்ரேல்

#world_news #Israel #War
Prathees
2 years ago
ஹமாஸ் நரகத்தின் வாசலைத் திறந்ததாக கூறும் இஸ்ரேல்

காஸா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

 அதன்படி ஹமாஸ் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் கூறியது.

 ஹமாஸ் தனது நாட்டை தாக்குவதன் மூலம் நரகத்தின் வாசலைத் திறந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்தது.

 மேலும், காஸா பகுதியில் யதார்த்தத்தின் முகத்தை மாற்றுவோம் என்றும் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

 ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 இஸ்ரேலின் பதிலடித் தாக்குதல்களின் விளைவாக காஸா பகுதியில் 232 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4