வயிற்றுப்போக்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவுவது குறித்து எச்சரிக்கை
#SriLanka
#doctor
#Fever
Prathees
2 years ago
மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பிரதேசங்களில் வயிற்றுப்போக்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் குழந்தைகளின் சுகாதார நிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
சுத்தமான நீர் மற்றும் சுத்தமான உணவைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
நோய்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில், மக்கள் முடிந்தவரை வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவையே பயன்படுத்த வேண்டும் என பொரளை ரிட்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சை நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.