இஸ்ரேலை சூழ்ந்த போர் மேகம் : அரபு உலகில் பதற்றம்!

#Israel #War #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
7 months ago
இஸ்ரேலை சூழ்ந்த போர் மேகம் : அரபு உலகில் பதற்றம்!


நீண்ட நாட்களின் பின் அரபு உலகில் ஒரு பெரும் பதற்றம். பாலஸ்தீனம் என்ற தனி நாட்டுக்காக போராடும் இயங்களில் ஒன்றான ஹமாஸ் இயக்கப் போராளிகள் தொடுக்கஇ ஒரே பதட்டம் அரபுலகில் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.

ஒரு பக்கம் குண்டு மழை. மறுபக்கம் பாரசூட்டில் இறங்கிய ஹமாஸ் வீரர்கள்! இஸ்ரேலில் இன்று நடந்தது என்ன ஹமாஸ் படைகள் இன்று காலை இஸ்ரேலில் பல இடங்களில் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். யாருமே எதிர்பார்க்காத வகையில் நடந்த இந்தத் தாக்குதலில் ஒட்டுமொத்த இஸ்ரேல் நிர்வாகமும் ஆடிப்போய்விட்டது.

இஸ்ரேலில் விடுமுறை நாளாக இருக்கும் நிலையில் காலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் படை தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த பகீர் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை.


images/content-image/1696737033.jpg

இருப்பினும் இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமானோர் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொல்லப்பட்டுள்ளனர். முதலில் பாலஸ்தீனின் ஹமாஸ் படைகள் அதிகாலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் தங்கள் இருப்பிடமான காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி தாறுமாறாக ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளனர். காலை 6.30 மணிக்கு ஆரம்பித்த இந்தத் தாக்குதல் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுக்க புகை மூட்டம் உருவானது. 30 நிமிடங்களுக்கு 5000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஹமஸ் படை தாக்குதல் நடத்தியுள்ளது.

பொதுவாக ஏவுகணை தாக்குதல் என்றால் ராணுவ இடங்களைக் குறிவைத்தே நடத்தப்படும். ஆனால் இன்று நடந்த தாக்குதலில் மக்கள் இருக்கும் இடங்களிலும் சேர்த்தே ஏவுகணைகள் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் காலை எழுந்திருக்கும் போதே குண்டுவெடிப்பு சத்தத்துடனேயே பொதுமக்கள் எழுந்துள்ளனர். இந்த குண்டு மழையால் பல்வேறு இடங்களில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

images/content-image/1696737051.jpg

அடுத்து பாரசூட்: இந்த ஏவுகணை தாக்குதல் ஒரு பக்கம் இருக்க.. மற்றொரு புறம் ஹமாஸ் வீரர்கள் பாரசூட் கொண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். முதலில் ஏவுகணை தாக்குதலை நடத்திய அவர்கள் மறுபுறம் விமானம் மூலம் இஸ்ரேல் நாட்டின் எல்லைக்கு மிக அருகே வந்து அங்கிருந்த பாரசூட் மூலம் இஸ்ரேல் நாட்டிற்குள் இறங்கியுள்ளனர். அவர்களிடம் அதிநவீன ஆயுதங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இஸ்ரேல் பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஜீப் மூலம் நுழைந்த வீரர்கள்: மற்றொரு பக்கம் பார்த்தோம் என்றால் காமஸ் படைகள் எல்லைகளை உடைத்து ஜீப் மூலமாகவும் உள்ளே நுழைந்துள்ளனர். இஸ்ரேல் படைகள் கவனிக்காத நேரத்தில் எல்லை வேலிகளை உடைத்து நொறுக்கிவிட்டு அவர்கள் ஜீப் மூலம் உள்ளே வந்துள்ளனர். அவர்களிடம் அதிநவீன ஆயுதங்கள் ராக்கெட் லாஞ்சர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

images/content-image/1696737079.jpg

மேலும் அவர்கள் மக்களை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இப்படி எல்லா பக்கமும் இருந்தும் ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேல் ராணுவம் நிலைகுலைந்து போய்விட்டது. ஹமாஸ் படைகளால் இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்த முடியாது என்றும் நிச்சயம் அவர்கள் பின்னணியில் வேறு நாடுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஹமாஸ் படைகளுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இதற்காக இஸ்ரேல் பதில் தாக்குதலையும் ஆரம்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இப்படியான தாக்குதல்கள் நடப்பது இது முதல் முறை கிடையாது. இருப்பினும் தற்போது நடைபெற்ற ஏவுகணை தாக்குதல் சம்பவம் ஏற்கெனவே நடந்த இஸ்ரேல் பாலஸ்தீன மோதலை நினைவுகூர்ந்திருக்கிறது.

images/content-image/1696737137.jpg

எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் உதவியுடன் தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து அவ்வப்போது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதலை தொடுத்து வந்திருக்கிறது. இந்த பின்னணியில்தான் இன்று காலை ஹமாஸ் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது.

இதே ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் படைப்பிரிவை சேர்ந்த கிலாத் ஷாலித் என்பவரை ஹமாஸ் பிரிவினர் கைது செய்தனர். இவர் 2011ம் ஆண்டுதான் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் ஏற்பட்ட உடன்படிக்கையையடுத்து விடுவிக்கப்பட்டார். இதே 2007ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி உள்நாட்டு போரின் மூலம் ஹமாஸ் படை காசாவை கைப்பற்றியது. இதற்கு அடுத்த ஆண்டான 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதியன்று தெற்கு இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட் மீது பாலஸ்தீனியர்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தினர்.

images/content-image/1696737227.jpg

இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக காசா மீது இஸ்ரேல் 22 நாட்கள் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலில் 1400 பாலஸ்தீனியர்கள்இ 13 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதியன்று ஹமாஸின் இராணுவத் தளபதி அஹ்மத் ஜபாரியை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலஸ்தீனம் ஏவுகணை தாக்குதலை தொடுத்தது.

இதேபோல கடந்த 2014ம் ஆண்டு ஹமாஸ் படையினரால் 3 இஸரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இது 7 வார போருக்கு வழிவகுத்தது. இதில் கசாவில் 2100 பேர் கொல்லப்பட்டனர்.

15 ஆண்டுகளில் 4-வது 'படையயெடுப்பு'!' புதிய' உத்வேகம் காட்டிய ஹமாஸ் இஸ்ரேல்-காசா எல்லையில் வேலி போட்டப்பட்டது. அதேபோல எல்லைத்தாண்டும் மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இப்படியே பல மாதங்கள் நடந்த போராட்டத்தில் 170 பேர் கொல்லப்பட்டனர். இதே 2021ம் ஆண்டு ரமலான் மாதத்தில் ஜெருசலேத்தின் உள்ள அல் அக்ஸா வளாகத்தில் இஸ்ரேலிய படைகளுடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்தனர்.



images/content-image/1696737311.jpg

பின்னர் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மூத்த இஸ்லாமிய ஜிஹாத் தளபதியை குறி வைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதலில் ஈடுபட்டன. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 15 குழந்தைகள் உட்பட 44 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல கடந்த ஜனவரி மாதம் மற்றொரு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்படியாக நடைபெற்ற மோதல் சமபவங்களின் தொடர்ச்சியாகதான் இன்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடந்திருக்கிறது. ஆனால் இந்த முறை ஹமாஸ் படையினைர் வலுவாக இருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

நன்றி

முகநூல் நண்பர்......!