தும்புத்தடி உடையும் வரை அடிப்போம் எனக்கூறி மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு ஆதரவாக போராட்டம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தும்புத்தடி உடையும் வரை அடிப்போம் எனக்கூறி மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு ஆதரவாக போராட்டம்!

தும்புத்தடி உடையும் வரை அடிப்போம் எனக்கூறி மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு ஆதரவாகவும்,  பாராளுமன்றில் குரல் கொடுத்த தமிழ் எம்பிகளுக்கு எதிராகவும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தலைமையில் மட்டகளப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம் இடம்பெறவுள்ள நிலையில் மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு விஜயத்தினை முன்னிட்டு 'ரணிலுக்காக நாம் 2024' என்ற தலைப்பில் பாரிய கட்டவுட் மட்டக்களப்பு நகரில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் கட்டவுட் முன்னால் தும்புத்தடியோடு நின்றவாறும் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

அதிபரே கேளுங்கள் சிங்களவர்களை துரத்துகின்றார்கள், சாணக்கியன் தொண்டமான் எமக்கு வேண்டாம்இஇனவாதம் தூண்ட வேண்டாம் என்ற கோசங்களை எழுப்பியவாறு இவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை 1000க்கு மேற்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதரத்தை அழித்து சிங்களவரை குடியேற்றி தமிழர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வர இந்த இனவாதிகள் துடிக்கிறார்கள் .

சில வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது திருகோணமலையில் வைத்து சிங்கள இனவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தமையும், அதில் கைது செய்யப்பட்ட 06 சந்தேக நபர்களையும் நீதிமன்றம் விடுவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!