ஜின் கங்கைக்கு அண்மித்த பகுதிகளில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்!
#SriLanka
#Lanka4
#Flood
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜின் கங்கையை ஒட்டிய பத்தேகமவின் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த சில வாரங்களாக நிலவும் கடும் மழைக்கு மத்தியில் வெள்ள நீர் மட்டம் அதிகரித்து வருவதால், 11 கிராம அலுவலர் பிரிவுகளில் அடையாளம் காணப்பட்ட 276 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.