மலேசிய வெளிவிவகார அமைச்சர் ஜாம்ப்ரி இலங்கை விஜயம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மலேசிய வெளிவிவகார அமைச்சர் ஜாம்ப்ரி இலங்கை விஜயம்!

மலேசியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜாம்ப்ரி அப்துல் காதிர் இன்று (08.10) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். 

இந்த விஜயத்தின்போது , வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன்  இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திக்க உள்ளார். 

காதிரின் குறித்த விஜயத்தின்போது, தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் (SCA) துணைச் செயலாளர் டத்தோ சையத் முகமட் பக்ரி சையத் அப்துல் ரஹ்மான், OIC மற்றும் பிராந்திய ஒத்துழைப்புப் பிரிவின் (ORCD) துணைச் செயலாளர் அஹ்மட் கம்ரிசாமில் முகமட் ரிசா மற்றும் வெளியுறவு அமைச்சரின் சிறப்பு அதிகாரி மலேசிய வெளியுறவு அமைச்சகத்தின் அப்தில்பர் அப் ரஷித் ஆகியோர் உடன் வருகைத்தரவுள்ளனர். 

இதேவேளை கொழும்பில் நடைபெறும் IORA மூத்த அதிகாரிகள் குழுவின் 25வது கூட்டத்திலும் 23வது IORA அமைச்சர்கள் குழுவிலும்  மலேசியப் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!