பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் : 100 பேர் பலி!

#Israel #War #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் : 100 பேர் பலி!

பாலஸ்தீனத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் 100க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இஸ்ரேலின் பல பகுதிகளுக்குள் நுழைந்த பலஸ்தீன ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளது. 

பாலஸ்தீன ஹமாஸ் தாக்குதல்களால் சுமார் 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  

ஹமாஸ் உறுப்பினர்களால் இஸ்ரேலியர்கள் குழுவொன்று கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களும் தெரிவிக்கின்றன.  

இதேவேளை, 161 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4