GCE O/L பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தேர்வை ஐந்து அல்லது ஆறு பாடங்களாகக் குறைப்பது தொடர்பில்கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டு முதல் பரீட்சை முறையில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்த மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மேற்கொள்ளும் விரிவான கல்வி சீர்திருத்தத்தின் கீழ் இந்த திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கப்படுவதாகவும், இதன் மூலம் மாணவர்களுக்கான பரீட்சைகளின் சுமையை குறைப்பதற்கும் அதன் தரத்தை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை ஏ-லெவல் ஸ்ட்ரீம்களின் எண்ணிக்கையை எட்டு அல்லது ஒன்பதாக அதிகரிக்கவும், மாணவர்களுக்கான விருப்பங்களை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.