மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு!

மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 18 லட்ச ரூபா பெறுமதியான கடற்தொழில் உபகரணங்கள்  கிளிநொச்சி மீனவர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

மெசிடோ நிறுவனத்தின்னால் மாவட்ட செயலாளர் முன்னிலையில் இந்த உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம்  மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் தெரிவுசெய்யப்பட்ட 40 பயனாளிகள் பலன் பெற்றுள்ளனர். 

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் (06.10) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.  

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி, பச்சிளப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட அன்பு புரம் , இரனைமாதானகர், நாச்சிக்குடா, நாவாந்துறை, வேலைப்பாடு, கிளாலி உள்ளிட்ட கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 40 பயனாளிகளுக்கே குறித்த கடற்தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டள்ளது. 

இந்நிகழ்வில்,  கிளிநொச்சி மாவட்ட செயலாளர் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், மற்றும் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

மேலும் குறித்த திட்டத்தில் வடக்கு, மாகாணத்தில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட 172 பயனாளிகளுக்கு குறித்த உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது. 

images/content-image/1696676103.jpg

images/content-image/1696676150.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4