உக்ரைனின் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரான்ஸ் கண்டனம்!
#world_news
#War
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
உக்ரேனின் கிழக்கு நகரமான Groza மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 05 ஆம் திகதி நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர். உக்ரேனிய இராணுவ வீரர் ஒருவரின் இறுதிச் சடங்கு Groza நகரில் இடம்பெற்ற நிலையில், அங்கு ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
இதில் குழந்தை உள்ளிட்ட 51 பேர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டனர். இந்த மனிதப்படுகொலைக்கு உலக நாடுகள் உடனடி கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் வெளியிட்ட ஊடக அறிக்கையில், 'உள்நோக்கத்தோடு பொதுமக்கள் மீது இரஷ்யா தாக்குதல் நடத்துகிறது. ரஷ்யா வரலாற்றுத் தவறை மேற்கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளது.