பத்தாயிரம் லீற்றர் பாலுடன் சென்ற பவுசர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து

#SriLanka #Accident
Prathees
2 years ago
பத்தாயிரம் லீற்றர் பாலுடன் சென்ற பவுசர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து

வட்டவளை லோனக் தோட்டத்திலிருந்து மீரிகம நோக்கி பத்தாயிரம் லீற்றர் பால் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

 கினிகத்தேன நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியின் லோனக் வத்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 லோனாக் தோட்டத்திலுள்ள கால்நடை பண்ணையிலிருந்து பத்தாயிரம் லீற்றர் திரவப் பாலை ஏற்றிச் சென்ற பவுசர், வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, ​​அப்பகுதியில் நிலவும் கடும் காலநிலை மற்றும் கடும் உறைபனி காரணமாக வீதியை விட்டு விலகிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 விபத்து இடம்பெறும் போது சாரதி மாத்திரமே பௌசரில் பயணித்துள்ளதாகவும், விபத்தில் சாரதிக்கு காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பிரதான வீதிகள் மற்றும் பக்க வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது கவனமாகவும் மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!