மட்டக்களப்பில் பதட்டமான சூழல்! பொலிஸார் குவிப்பு
#SriLanka
#Batticaloa
#Police
#Protest
Mayoorikka
2 years ago
மயிலத்தமடு மேய்ச்சல் தரைகளிலிருந்து விரட்டப்பட்ட அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்கவும் அவர்களின் பூர்வீக மேய்ச்சல் தரைகள் மீளவும் அவர்களிடமே ஒப்படைக்கப்படவும் கோரி போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் அகிம்சை வழியில் இடம்பெறும் போராட்டத்தினை அடக்கப் பொலிசார் குவிக்கப்படுகின்றார்கள் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறிய மேய்ச்சல் தரை அபகரிப்புத் தொடர்பில் தொடர்ந்து 23 ஆவது நாளாக இன்றும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.


