கொழும்பில் துப்பாக்கி சூடு - கொல்லப்பட்ட முன்னாள் கொமாண்டோ!

#SriLanka #Colombo #Death #Police #GunShoot
PriyaRam
2 years ago
கொழும்பில் துப்பாக்கி சூடு -  கொல்லப்பட்ட முன்னாள் கொமாண்டோ!

கொழும்பில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொல்லப்பட்டவர், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் கொமாண்டோ ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹங்வெல்லவில் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களுக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குறித்த முன்னாள் கொமாண்டோ சிப்பாய் தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!