பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் 1417 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு
#SriLanka
#Staff
#Engineer
Prathees
2 years ago
அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய இயந்திரவியல் நிறுவனத்தில் பணியாற்றும் 1,417 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு இழப்பீட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்காக 376 கோடி ரூபா திறைசேரிக்கு கிடைத்ததாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏஜின ரத்னசிறி களுபஹன தெரிவித்தார்.
இழப்பீட்டுத் தொகையுடன் ஓய்வுபெறவுள்ள 1,417 ஊழியர்களில் 55 வயதுக்கு மேற்பட்ட 252 ஊழியர்களும் 55 வயதுக்குட்பட்ட 1,165 ஊழியர்களும் அடங்குவர்.