ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற இன்று கடைசி நாள்!

#India #Twitter #Parliament #Tamilnews #money #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற இன்று கடைசி நாள்!


நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த மே 10-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதையடுத்து, செப்டம்பர் 30-ம் தேதி வரை தனிநபர்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ரூ.2000 நோட்டை மாற்றுவதற்கான காலக்கெடு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. தற்போது ரூ.2000 நோட்டை வங்கிகளில் மாற்ற இன்று கடைசி நாளாகும்.

இன்றுக்குள் வங்கிகளில் ரூ.2000 நோட்டை மாற்ற முடியாதவர்கள், நாளை முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.20,000 வரை ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 19 கிளைகளில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4