இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள மலேசிய வெளிவிவகார அமைச்சர்!

#SriLanka #foreign
PriyaRam
2 years ago
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள மலேசிய வெளிவிவகார அமைச்சர்!

மலேசியாவின் வெளிவிவகார அமைச்சர் டத்தோஸ்ரீ டிராஜா ஜாம்ப்ரி அப்ட் காதிர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதற்கமைய நாளை ஞாயிற்றுக்கிழமை அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, மலேசிய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

மலேசியாவின் வெளியுறவு அமைச்சருடன் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் (SCA) துணைச் செயலாளர் டத்தோ சையத் முகமட் பக்ரி சையத் அப்துல் ரஹ்மான், மலேசிய வெளிவிவகார அமைச்சின் அமைச்சர் அப்தில்பர் அப் ரஷித், OIC மற்றும் பிராந்திய ஒத்துழைப்புப் பிரிவின் (ORCD) துணைச் செயலாளர் அஹ்மட் கம்ரிசாமில் முகமட் ரிசா மற்றும் வெளியுறவுத் துறையின் சிறப்பு அதிகாரி ஆகியோரும் வருகை தரவுள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது, கொழும்பில் நடைபெறும் IORA மூத்த அதிகாரிகள் குழுவின் 25வது கூட்டத்திலும் மலேசியப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!