புத்தளம் சிறைச்சாலையில் சந்தேக நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
#SriLanka
#Prison
#Puththalam
Prathees
2 years ago
புத்தளம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் அறையில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
33 வயதான சந்தேக நபர் குருநாகல் நிகடலுபாத பிரதேசத்தை சேர்ந்தவர்.
மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.