ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவதற்கான எந்த திட்டமும் இல்லை - மைத்திரி
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவதற்கான எந்த திட்டமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் விஞ்ஞாபனமொன்றை முன்வைப்பதற்கும் மாவட்ட மற்றும் தொகுதி மட்டத்தில் அமைப்பு செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.