கொள்ளுப்பிட்டியில் பஸ் மீது மரம் விழுந்து விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு! 17 பேர் வைத்தியசாலையில்

#SriLanka #Colombo #Accident #Hospital #Tamil News
Mayoorikka
2 years ago
கொள்ளுப்பிட்டியில் பஸ் மீது மரம் விழுந்து விபத்து:  ஐந்து பேர் உயிரிழப்பு! 17 பேர் வைத்தியசாலையில்

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பயணிகள் பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன்17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 லிபர்ட்டி சுற்றுவட்டத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் பம்பலப்பிட்டி நோக்கி பயணித்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

 இன்று (06) காலை 6 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்து காரணமாக, டுப்ளிகேஷன் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இதனால் அந்த பகுதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை குளியாப்பிட்டி - கரந்திப்பல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் பாடசாலை பஸ் மோதியதில் குறைந்தது 15 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!