மக்கள் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதங்கள் விரைவில் குறைக்கப்படும் - நந்தாலால் வீரசிங்க!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #nandalal weerasinghe
Thamilini
2 years ago
மக்கள் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதங்கள் விரைவில் குறைக்கப்படும் - நந்தாலால் வீரசிங்க!

மக்கள் வாங்கிய கடனுக்காக வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதங்கள் மிக விரைவில் குறைக்கப்பட வேண்டும் என மத்திய வங்கி கூறுகிறது.  

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (05.10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "வட்டி விகிதங்கள் மிக விரைவில் குறைக்கப்பட வேண்டும். வட்டி விகிதம் எப்படி குறைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம், இது வங்கிகளில் உள்ள அனைவரையும் பாதிக்கிறது. எங்களுக்குத் தெரியும், வங்கி அமைப்பு இப்போது மிகவும் நிலையானது எனத் தெரிவித்துள்ளார்.  

IMF செயல்முறை குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்த செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் என்ற முறையில், IMF செயல்முறைக்கு சீனாவில் இருந்து மட்டுமின்றி மற்ற நாடுகளிலிருந்தும் நல்ல ஆதரவு உள்ளது என்று கூறலாம்.

"இந்தியா, ஜப்பான், பாரிஸ் கிளப் தலைமையிலான அமைப்பு மற்றும் சீனா ஆகியவை நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன. எனவே, இந்த நடவடிக்கைகளை மிக விரைவாக முடிக்க முடியும்."எனக் கூறினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!