நாளை முதல் ஆரம்பமாகிறது நாகபட்டினம் - காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவை!

#India #SriLanka #Tamil Nadu #Ship
PriyaRam
2 years ago
நாளை முதல் ஆரம்பமாகிறது நாகபட்டினம் - காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவை!

இந்தியாவின் நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்கமைய நாளை முதல் குறித்த கப்பல் சேவை ஆரம்பமாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்துக்கு நேற்று புறப்பட்ட கப்பல், இன்று நாகபட்டினத்தை சென்றடைந்தது.

இந்த நிலையில், குறித்த கப்பல் நாளை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைக்கான பயணத்தை சோதனை முறையில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், துறைமுகத்திற்கான அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுபெற்று ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!