பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

#SriLanka #School #Susil Premajayantha #Ministry of Education
Mayoorikka
2 years ago
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் அறிவித்தல் ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளார். 

 இதன்படி பாடசாலை தவணை விடுமுறை டிசெம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “உயர்தரப் பரீட்சை தினம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 ஜனவரி 4 முதல் 31 ஆம் திகதி வரையில் பரீட்சை நடக்கவுள்ளது. இதன்படி யாரேனும் விண்ணப்பிக்க இருந்தால் அவர்களுக்கு 3 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. பரீட்சை தொடர்பான கால அட்டவணை அடுத்த வாரமளவில் வெளியிடப்படும்.

 இதேவேளை பாடசாலை விடுமுறை இம்முறை டிசெம்பர் 22ஆம் திகதியளவில் வழங்கப்படலாம். ஆரம்ப பிரிவுகள் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

 பரீட்சை முடிவடைந்த பின்னர் மற்றைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்படலாம். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும்” என்றுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4