கொழும்பில் மீண்டும் வெடிகுண்டு பீதி

#SriLanka #Colombo #Court Order
Prathees
2 years ago
கொழும்பில் மீண்டும் வெடிகுண்டு பீதி

கொழும்பின் பல இலக்கு இடங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் சில நாட்களில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என கிடைத்த தகவல் தொடர்பில் உடனடியாக உத்தியோகபூர்வ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று (04) பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

 பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

 நீதிமன்றில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவரால் பேருந்தின் ஜன்னலுக்கு வெளியே வீசப்பட்ட மரத்துண்டு ஒன்றின் மூலம் இந்தத் தாக்குதல் தொடர்பிலான அடிப்படைத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பித்த தகவல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!