வாடகை கட்டவில்லை: வனவிலங்கு அமைச்சின் கட்டிடத்தில் உள்ள மின்தூக்கிகள் முடக்கம்
#SriLanka
#Colombo
Prathees
2 years ago
இராஜகிரியவில் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு நிறுவப்பட்டுள்ள ஏழு மாடிகளைக் கொண்ட 'சினோ லங்கா' கட்டடத்திற்கான வாடகை செலுத்தப்படாததால், இம்மாதம் 4ஆம் திகதி முதல் மின்தூக்கிகள் முடங்கியுள்ளன.
இதனால், அமைச்சின் ஊழியர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். எனினும் அமைச்சின் முக்கியஸ்தர்களுக்கான மின்தூக்கியை மாத்திரம் இயக்க கட்டிட உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் எதிர்வரும் நாட்களில் வாடகையை செலுத்த நிதியமைச்சு நடவடிக்கை எடுக்காவிட்டால் அமைச்சின் மின்சாரம் துண்டிக்கப்படும் என கட்டிடத்திற்கு சொந்தமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அமைச்சகத்தை வேறு அரசு கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டது, ஆனால் இதுவரை அது வெற்றிபெறவில்லை.