நான் ஜனாதிபதி வேட்பாளராக இருந்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சரத் பொன்சேகா
#SriLanka
#Sarath Fonseka
#srilankan politics
Prathees
2 years ago
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டால், அனைத்து இராணுவமும் தம்மைச் சுற்றி திரளும் என ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று கூறும் அவர் வெற்றி பெறுவது மட்டுமன்றி நாட்டையும் கட்டியெழுப்புவேன் என்று கூறுகிறார்.
எவ்வாறாயினும், சமகி ஜன பலவேகய ஒரு வருடத்திற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்தக் கூடாது எனவும், இன்னும் ஒரு வருடத்தில் மக்களின் மனம் எவ்வாறு மாறும் என்பதை அறியாமல் வேட்பாளரை நியமிப்பது பொருத்தமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.