பயணிகள் மற்றும் ஊழியர்கள் மோதல்: கோட்டை,மருதானை ரயில் நிலையங்களை சூழ்ந்துள்ள இராணுவத்தினர்
#SriLanka
#Colombo
#Train
Prathees
2 years ago
கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தொடரூந்து பணிப்புறக்கணிப்பு காரணமாக ஏற்படக்கூடிய சூழ்நிலையை கருத்திற் கொண்டு மேலதிக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அந்த ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள பல ரயில் நிலையங்களில் ரயில் ஊழியர்கள் மீது பயணிகள் மோதியதால் பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில், பல ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதேவேளை, புகையிரத சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் பல ரயில்கள் தாமதமாக வரலாம் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.