விளையாட்டுத்துறை அமைச்சரின் வர்த்தமானி அறிவிப்பின் செயற்பாட்டைத் தடுக்கும் நீதிமன்றத்தின் உத்தரவு
#SriLanka
#Court Order
#Srilanka Cricket
Prathees
2 years ago
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு சிதத் வெத்தமுனி தலைமையிலான குழுவொன்றை நியமித்து விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி வரை மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சமர்ப்பித்த ரிட் மனுவை பரிசீலித்ததன் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.