மீண்டும் தாமதமாக புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம்!
#Flight
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#news
Thamilini
2 years ago
அண்மைக்காலமாக இலங்கையின் விமான சேவைகள் தாமதமாகி வருகின்ற நிலையில், கடந்த வாரத்தில் பயணிகள் பெருமளவு அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கு புறப்படவிருந்த இலங்கை விமானம் ஒன்று 10 மணித்தியாலங்கள் 27 நிமிடங்கள் தாமதமாகியுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-402 என்ற விமானமே இவ்வாறு தாமதமாக புறப்பட்டள்ளது. குறித்த விமானம் நேற்று (03.10) அதிகாலை 01.10 மணிக்கு புறப்பட்ட இருந்த நிலையில், தாமதமாக புறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இன்று (04) காலை 10.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL -403 விமானத்தின் வருகையும் தாமதமாகியதாக தெரியவருகிறது.