புகையிரத திணைக்களத்திற்கு காணியால் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை: பந்துல
#SriLanka
#Bandula Gunawardana
Prathees
2 years ago
புகையிரத திணைக்களத்திற்கு 5739.8 ஹெக்டேயர் காணிகள் உள்ள போதிலும் காணி பதிவேட்டை பராமரிப்பதில்லை என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதில் 1500 ஏக்கர் காணி குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் கடந்த வருடம் (2022) ஈட்டிய வருமானம் 182 மில்லியன் எனவும் அது எப்படியும் போதாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வாய்மொழி பதில்களை எதிர்பார்த்து ஆளும் கட்சி உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், ரயில்வே துறையிடம் இவ்வளவு பெரிய நிலம் இருந்தாலும், அதிலிருந்து வரும் வருமானம் எந்த வகையிலும் போதுமானதாக இல்லை, எனவே இது தொடர்பாக தேசிய பணி ஆணை தேவை என்றும் அவர் கூறினார்.