பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தியால் தாக்கிய முச்சக்கரவண்டி சாரதி கைது
#SriLanka
#Police
#Attack
Prathees
2 years ago
பாணந்துறை அலோபோமுல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கைது செய்ய சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மீது மன்னா கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த கான்ஸ்டபிள் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதி மதுபோதையில் அதிவேகமாக வாகனத்தை செலுத்திய போது அலோபோமுல்ல பொலிஸ் போக்குவரத்து பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் வாகனத்தை நிறுத்தி சாரதியிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது முச்சக்கரவண்டியின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வந்து பொலிஸ் உத்தியோகத்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மன்னாவால் தாக்கியுள்ளார்.
கான்ஸ்டபிளை தாக்கிவிட்டு தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் நேற்று (03) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.