முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு புலம்பெயர்ந்தவர்களினால் வழங்கப்பட்ட இயந்திரம் சிங்கள வைத்தியசாலைக்கு!
அனுராதபுரம் வைத்தியசாலையில் உள்ள Endoskopie இயந்திரம் பழுது அடைந்து விட்டதால் , முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் புலம்பெயர் தமிழர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட மெசினை , முல்லைத்தீவிலிருந்து , அனுராதபுரம் எடுக்க தீர்மானிக்கப்பட்டதாக அறியப்பட்டது .
அப்போது ஒரு தமிழ் வைத்தியநிபுணர் அது அரசால் வழங்கப்பட்டது இல்லை . புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்டது என அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்
அதற்கு ஒரு சிங்கள வைத்திய நிபுணர் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டால் அதற்கு தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது , அதுபற்றி சுகாதார அமைச்சே தீர்மானிக்க வேண்டும் என் தெரிவித்தார் .
இந்தநிலையில் இந்த விடயத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து , முல்லைத்தீவு மாவட்ட அரசியல் தலைமைகளும் , சுகாதார திணைக்கள அதிகாரிகளும் , அவசர அவசியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படடுள்ளது.