அமெரிக்காவில் திறக்கப்படவுள்ள 19 அடி உயர அம்பேத்கர் சிலை

#India #America #world_news #Tamilnews #statue #Politician
Prasu
1 year ago
அமெரிக்காவில் திறக்கப்படவுள்ள 19 அடி உயர அம்பேத்கர் சிலை

இந்தியாவிற்கு வெளியே இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பியான பி ஆர் அம்பேத்கரின் மிக உயரமான சிலை மேரிலாந்தில் அக்டோபர் 14 ஆம் திகதி திறக்கப்பட உள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

19-அடி சிலை, ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்நிலையில் அமெரிக்காவில், வரும் அக்டோபர் 14 அன்று மேரிலாண்ட் மாநிலத்தில் அக்கோகீக் (Accokeek) பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகி வரும் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் (AIC) ‘சமத்துவத்திற்கான சிலை’ (Statue of Equality) என பெயரிடப்பட்ட 19 அடி உயர அம்பேத்கர் சிலை ஒன்று திறக்கப்பட இருக்கிறது.

“இந்தியாவுக்கு வெளியே பாபாசாகேப்பின் மிகப்பெரிய சிலை இதுவாகும், ஏப்ரல் 14, 1891 இல் பிறந்த டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர். அவருக்கு இந்திய அரசியலமைப்பின் சிற்பி என்று அழைக்கப்படுகின்றார்

சுதந்திரத்திற்குப் பிறகு, பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதி அமைச்சராகவும் இருந்தார். தலித்துகள் மற்றும் தீண்டத்தகாதவர்களின் உரிமைகளுக்காகப் போராடிய சமூக இயக்கங்களில் அம்பேத்கர் முக்கியப் பங்காற்றினார். 

அம்பேத்கர் டிசம்பர் 6, 1956 அன்று இறந்தார், அவர் புத்த மதத்தைத் தழுவிய சில மாதங்களுக்குப் பிறகு, அந்த ஆண்டு அக்டோபர் 14 அன்று மேரிலாந்தில் சிலை திறக்கப்பட்ட தேதியுடன் ஒத்துப்போகிறது. 

அக்டோபர் 14 ஆம் தேதி அம்பேத்கரியர்களால் தம்ம சக்ர பரிவர்த்தன் தினமாக கொண்டாடப்படுகிறது. “ஒற்றுமைக்கான சிலை” (Statue of Unity) எனும் பெயரில் இந்திய மாநிலம் குஜராத்தில் இந்திய சுதந்திர போராட்ட தலைவரான சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்த புகழ் பெற்ற சிற்பி ராம் சுதார் (Ram Sutar) கைவண்ணத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

 அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு உலகெங்கிலுமிருந்து பல முக்கிய பிரதிநிதிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!