நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

#SriLanka #Death #Hospital #Soldiers #Sri Lankan Army #Swim
Prasu
2 years ago
நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மொனராகலை கும்பக்கன் ஓயாவில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இராணுவ உப லெப்டினன்ட் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த கிஹான் சஞ்சுல டி சில்வா (23) என்ற உப லெப்டினன்ட் என்பவரே உயிரிழந்துள்ளார்.

 மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும்போது, செப்டெம்பர் 20ஆம் திகதி நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த போதே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4