சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு முன்வைத்த 16 பரிந்துரைகள்!
சர்வதேச நாணய நிதியத்தின் பொது நிர்வாக பகுப்பாய்வு மதிப்பீட்டு அறிக்கை இலங்கைக்கு 16 முன்னுரிமைப் பரிந்துரைகளை செய்துள்ளதுதாக தெரியவருகிறது.
இலங்கையின் நிர்வாக முறையை மேம்படுத்துவதற்காக இந்த பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
உண்மையான வருமானம் வீழ்ச்சியடைவதன் காரணமாக நாட்டில் சமூக பதட்டங்கள் அதிகமாக இருப்பதாக 2023 - செப்டம்பர் - பொது நிர்வாக பகுப்பாய்வு மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த கால முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் அதற்குரிய தண்டனையை அனுபவிக்காமல், தத்தமது பதவிகளில் தொடர்ந்தும் நீடிக்கின்றமையும் பொதுமக்கள் கவனம் செலுத்தியுள்ள விடயமாக அமைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரேஷ்ட அதிகாரிகளுக்கான (ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள்) சொத்து அறிவிப்புகளை நியமிக்கப்பட்ட இணையதளத்தில் வெளியிடுவது 2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி முடிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் முன் அனுமதியின்றி வரி மாற்றங்களை அறிமுகப்படுத்த அமைச்சர் அதிகாரத்தை நீக்க அல்லது கட்டுப்படுத்தவும், அத்தகைய மாற்றங்கள் வருமான இழப்பை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்தவும் வரிச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வங்கித் துறையில் நிதித்துறை மேற்பார்வை தொடர்பான சட்டம், ஒழுங்குமுறைகள் மற்றும் செயல்முறைகளை மறுபரிசீலனை செய்வது மற்றொரு பரிந்துரையாகும்
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கும் வளங்கள் மற்றும் திறன்கள், அவர்களின் செயல்பாட்டைச் செயல்படுத்துவதற்கான திறனை மேம்படுத்துவதற்கு விரிவாக்கல் திட்டத்தை நிறுவி அமுலாக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.